மாவட்ட அளவிலான வினாடி வினாப் போட்டி: அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

0 296
Stalin trichy visit

திருச்சி, அக்.11  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை.

திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகளில் வினாடி வினாப் போட்டியில், 6 & 7 – வகுப்பு,பிரிவில்   லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஆருஷ், தேவதர்ஷினி ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

அதே போல் சிறார் திரைப்படம் கதை, வசனப் போட்டியில் 6 மற்றும் 7 வகுப்பு பிரிவில்
மாணவி ஸ்ரீபவனிதா முதலிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்ற இம் மூன்று மாணவச் செல்வங்களும், மாநில அளவிலான ப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவச் செல்வங்களை பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாவளவன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் சுரேஷ் கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.