புள்ளம்பாடி வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்பு
திருச்சி, அக்.11 திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே புதூர் பாளையம் கிராமத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தவர் திடீரென நீரில் மூழ்கி மாயமானார். நீண்ட தேடுதலுக்கு பிறகு பின் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா குறட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் திருமுருகன்(40). இவர் நேற்று மதியம் புள்ளம்பாடி அருகே புதூர்பாளையத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பாரதி, சிவகுமார் வீரர்கள் ரமேஷ் குமார், மணிவண்ணன், வெங்கடேசன், தரணிதரன், மணிகண்டன், முகமது சமீர் சுரேந்தர் உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
பின்னர் கல்லக்குடி காவல் உதவியாளரிடம் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை ஒப்படைத்தனர் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.