திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வி.துறையூரைச் சேர்ந்தவர் கமலா (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.