சாம்பியன் பட்டம் வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
மாநில அளவிலான கராத்தே போட்டி சேலத்தில் நடந்தது. கட்டா மற்றும் குமித்தே பிரிவில் நடந்த இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட கராத்தே சங்க தலைவர் இளஞ்செழியன் தலைமையில் 13 பேர் கொண்ட திருச்சி அணி கலந்து கொண்டது.
போட்டிகளின் முடிவில் திருச்சி அணி 3 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் பட்டம் வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.