சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

0 279
Stalin trichy visit

திருச்சி ஜூன் 27- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பணியாற்றி வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்..இளஞ்சிவப்பு அட்டையில் இருந்து பச்சை அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்க அங்கீகார வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்காமல் உள்ள 524 தொழிலாளர்களின் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் ஆள் சேர்ப்பு நடைபெறாது என்றும், தற்போது பணி செய்யும் தொழிலாளர்களை சேர்ப்பதை அந்தந்த கிடங்குகளின் கொள்ளளவை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் ஆள் தேவைப்பட்டால் சேர்க்க வேண்டும்.தற்போது தொழிலாளர்கள் பணி செய்யும் கூலியை வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர்தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள்.

இதை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 அரசு கிடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ரேசன் கடைகளுக்கு அத்யாச பொருட்கள் எடுத்துச் செல்லும் பணி பாதிக்கப்பட்டது.மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லையென்றால் அடுத்த கட்டமாகநாளை 28ஆம் தேதி முதல்நிதான வேலை செய்யும்போராட்டமும், இதனைத் தொடர்ந்து ஜூலை 4ந் தேதி முதல்தொழிலாளர் ஆணை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும்,ஜூலை 10ஆம் தேதி முதல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம், மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம் எனபல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.