திருச்சி- பெங்களூர், எர்ணாகுளம், திருப்பதி இடையே அதிவிரைவு ரயில்களை இயக்க வேண்டும் : துரைவைகோ எம்.பி. பேச்சு

0 237
Stalin trichy visit

திருச்சி மார்ச் 18 திருச்சி – பெங்களூர், திருச்சி – எர்ணாகுளம், திருச்சி – திருப்பதி இடையே
அதில் விரைவு ரயில்களை இயக்க வேண்டும் .நாடாளுமன்றத்தில் துரை வைகோ எம்.பி பேச்சு.

நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற இரயில்வே துறை மானியத்தின் மீதான கோரிக்கையில் திருச்சி எம்.பி துரைவைகோ பேசியதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 தேர்வர்கள், உதவி எஞ்சின் ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, கணினி அடிப்படையிலான தேர்வின் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆனால், செய்திகளில் வெளியாகியுள்ள தகவலின்படி, அவர்களில் 90% பேர், 600 முதல் 1000 கிமீ தூரத்தில் உள்ள ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநில தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது .
இந்த தேர்வர்களில் பெரும்பாலானோர் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள் என்பதாலும், வேறு மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு செல்வது அதிக நிதிச்சுமை மற்றும் சிரமத்தை உருவாக்கும் என்பதாலும், இது அவர்களுக்கு மிகப்பெரிய இன்னலாக மாறியுள்ளது. பெண் தேர்வர்கள், பெரும்பாலும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் துணையுடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அவர்களுக்கு கூடுதல் பயணச்செலவும், தங்கும் செலவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இவர்களில் யாராவது தங்குவதற்கான வசதிகள் செய்துகொள்ள இயலாதவர்கள், இரயில் நிலையங்களில் அல்லது தேர்வு மைய வளாகங்களில் தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வர்கள், கடைசி நேரத்தில் இரயில் பயணச்சீட்டை உறுதி செய்வதில் உள்ள சிரமத்தையும், இரயில் தாமதம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழ் நாட்டைச் சேர்ந்த தேர்வர்களின் மேற்குறிப்பிட்ட அனைத்து சிரமங்களையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்குள்ளேயே அவர்களுக்குரிய தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும் , இரயில்வே துறை அமைச்சருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.
அத்துடன், என் திருச்சி தொகுதியின் சார்பாக, இரயில்வே துறை அமைச்சரிடம் மேலும் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்:
* திருச்சி – பெங்களூர் நகரங்களுக்கிடையிலான விரைவு இரயிலைஇயக்க வேண்டும்.
* ⁠திருச்சி – ஏர்ணாகுளம் மற்றும் திருச்சி – திருப்பதி வழியில் அதிவிரைவு இரயில்கள் இயக்க வேண்டும்.
* இரயில்வே வாரியத்தால் முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட தஞ்சாவூர் – மதுரை , கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக புதிய இரயில்பாதையை இரத்து செய்துள்ளது. புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை மக்களுக்குத் தேவையான இந்த இரயில்பாதையை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
* ⁠திருச்சி கோல்டன் ராக் மத்திய பணிமனைக்கு மாற்று மின்னோட்ட இழுவை அவ்வப்போது பழுதுபார்க்கும் பராமரிப்பு பணியோடு மேல்நிலை மின்மயமாதல் வசதிகளை அங்கீகரிக்க வேண்டும் .
* ⁠ மேலும், நான் முன்பு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து, மூத்த குடிமக்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும் இவ்வாறு துரை வைகோ எம்.பி பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.