தனியார் பேருந்து மோதியதில் புதுகையைச் சேர்ந்தவர் சாவு

0 304
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18 திருச்சியில் தனியார் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கா. சாகுல்அமீது (60). திருச்சி வந்த இவர் பாலக்கரை பகுதியில் நின்றிருந்தபோது, அவ்வழியே சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே சாகுல் அமீது உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தநர். இது தொடர்பாக திருச்சி மாநகர போக்குவரத்து புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.