ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன்

0 78
Stalin trichy visit

திருச்சி ஜன.28  ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 -வது பட்டமளிப்பு விழா இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது. விழா தொடங்கியவுடன் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பட்டங்கள் வழங்கினார். நடப்பாண்டில் 97,598 பட்டதாரி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இன்றைய விழா அரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முனைவர் பட்டம் பெறும் 690 மாணவர்கள், இளநிலை, முதுகலை, எம்.பில் மாணவ மாணவிகள் மொத்தம் 780 பேருக்கு  பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் பெங்களூரு தேசிய தர மதிப்பீட்டு நிர்ணயக் குடும்பத்தின் இயக்குனர் கண்ணபிரான், பல்கலைக்கழக துணைவேந்தர் குழு தலைவரும், கல்லூரி கல்வி இயக்கக ஆணையருமான சுந்தரவல்லி, பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன் மற்றும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் அவர் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.