இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த்தின் பிறந்த தினத்தை தான் நாம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறோம்.


இந்த நிலையில் வலிமையான பாரதம் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வித்துறை சார்பாக இன்று திருச்சி நீதிமன்ற சாலையில் விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் மனித சங்கிலி அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாடினர்.


இந்நிகழ்வில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் கலந்து கொண்டு விளையாட்டு தினம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் தேசிய கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன் மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

