எல்லா இளைஞர்கள் சார்பில் நான் போட்டியிடுகிறேன் : வேட்பாளர் அருண்நேரு பேட்டி

0 268
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக தலைவர் என்னை அறிவித்துள்ளார். இது பெரிய பொறுப்பும், வாய்ப்புமாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தலாக உள்ளது. ஒன்றிய அரசும், சுற்றி உள்ள அரசுகளும் தமிழகத்தில் திராவிட மாடல்களை கண்டு பொறாமை பட்டு நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேர்தல் மக்களுடைய உரிமை காப்பதற்காகவும், தமிழகத்திற்கு வரவேண்டிய எல்லா வளங்களும் பெற்று தர வேண்டும் என்பதற்கான முக்கியமான தேர்தலாக உள்ளது. இது இளைஞர்களுக்கான வாய்ப்பு, எல்லா இளைஞர்களுக்காக நான் போட்டியிடுவது பெருமையாக உள்ளது. அவர்கள் நினைப்பதை நான் சாதிப்பேன். 40தொகுதியிலும் தலைவர் இருப்பதாகவே கருத வேண்டும் என கூறியுள்ளார். இப்போது நாங்கள் வெறும் கருவியாக தான் உள்ளோம். எல்லோருக்கும் தொகுதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கொடுக்க உள்ளோம்.

பெரம்பலூருக்கு ரயில் நிலையம் கொண்டு வருவதற்கான பணியை துரிதப்படுத்துவதற்கு முக்கியம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இது தொடர்பாக தலைவர் கடிதம் எழுதி உள்ளார். ரயில் நிலையம் திட்டத்தை செயல்படுத்துவோம். மிக முக்கியமான விஷயங்களாக சுகாதாரமும், வேலை வாய்ப்பு உள்ளது.  சுகாதாரத்திற்கு என்ன திட்டம், வேலை வாய்ப்பு என்ன திட்டம்,அது நாளை வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் தலைவர் தான் ஹீரோ. அனைவரிடமும் கேட்டு அதன் அடிப்படையில் திட்டமிடுதலோடு வந்துள்ளது.

தேர்தல் அறிக்கை மக்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளது. தேர்தல் அறிக்கைகள் கட்டாயமாக செய்ய முடியும் என தலைவர் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அனைத்தும் செய்யப்படும் என தெரிவித்தார்..

Leave A Reply

Your email address will not be published.