தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நான் முதல்வன் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தில் திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 75 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் பொருட்டு அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கான மண்டல அளவிலான கருத்தரங்கு திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன்,
( காணொலிக் காட்சியின் வாயிலாக) தொழில் நுட்பக் கல்வித் துறை ஆணையர் ஜி.லெட்சுமிபிரியா , தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் சீனிவாசன், திருச்சி பாரத மிகுமின் நிறுவன செயல் இயக்குனர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.