அண்ணா பிறந்த நாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, செப்.14 மாவட்ட திமுக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு எடுத்துக்காட்டிய அரசியல் ஆசான், தந்தை பெரியாரின் வாரிசாகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் அண்ணனாகவும் வாழ்ந்து மறைந்த அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (செப்.15) காலை 9 மணி அளவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.