மணப்பாறையில் 50 ரூபாய் சேலை வாங்க அலைமோதிய கூட்டம்
திருச்சி, மார்ச் 10 மணப்பாறையில் 50 ரூபாய் சேலை வாங்க அலைமோதிய கூட்டம்.
நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மதுரை சாலையில் தனியார் ஜவுளிக்கடையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சேலை 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததுடன் சேலை வாங்க வருபவர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்க வேண்டும், சம்மந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தை பின் தொடர வேண்டும் என்ற விதிமுறையின் கீழ் சேலை வழங்கப்பட்டது. இருப்பினும் இன்ஸ்டா இல்லாமல் இருப்பவர்கள் கூட உடனடியாக ஒரு கணக்கை தொடங்கி சேலை வாங்க வரிசையில் காத்திருக்க தொடங்கினர். அவர்களது இன்ஸ்டா கிராம் பார்கோடை ஸ்கேன் செய்து கொண்டபின் 50 ரூபாய் பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் கடைக்குள் சென்று சேலையை செலக்ட்செய்து எடுத்துச் சென்றனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விற்பனை இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதி நாள் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பலரும் 50 ரூபாய்க்கு சேலைகளை வாங்கிச் செல்கின்றனர்.