கல்வி சுற்றுலா செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பெற்றோராக இருப்பேன் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பயிலும் 68 மாணவர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தனர். மாணவர்களுடன் துபாய் செல்லும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூ-றுகையில், கல்வி சுற்றுலா செல்லும் மாணவ, மாணவிகளுக்கு நான்தான் பெற்றோராக இருக்க போகிறேன்.
தமிழக அரசிடம் நாங்கள் அனுமதி மட்டுமே பெற்றுள்ளோம் இந்த சுற்றுலாவை பொருத்தவரை சிஎஸ்ஆர்
மூலமாக இந்த மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறோம்.
அண்ணாமலை மட்டுமல்ல மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருவெறும்பூர் வந்த போதும் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசி உள்ளனர் – முதலமைச்சர் பிரதமரை முதல் முறையாக சந்தித்தபோது தெளிவாக நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு தேவை இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
எங்களுடைய பிள்ளைகளுக்கு எங்களுடைய மாணவர்களுக்கு என்ன தர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று ஆணித்தனமாக முதலமைச்சர் பிரதமரிடம் கூறியிருந்தார்
எங்களுடைய பிள்ளைகளுக்கு எங்களுடைய மாணவர்களுக்கு என்ன தர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று ஆணித்தனமாக முதலமைச்சர் பிரதமரிடம் கூறியிருந்தார்