தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுப்படுத்தவில்லை என்றால் தேர்தலில் எதிரொலிக்கும் : டி.டி.வி. தினகரன் பேட்டி
திருச்சி, நவ.24 போதை பொருள் பழக்கம் மூலம் கொலை கொள்ளை அதிகரிப்பதை சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுகவிற்கு தேர்தலில் இது எதிரொலிக்கும் – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் .
S.I.R குறித்து குற்றச்சாட்டு எழுவதாக குறித்த கேள்விக்கு?
95 சதவீதம் ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சியினர் தாங்கள் வசிக்கிற பகுதியில் ஓட்டுரிமை பெற்றுத்தர தங்களின் கடமையாக செய்து வருகின்றனர் எதனால் குற்றம் சாற்றுகின்றனர் என தெரியவில்லை மத்திய S.I.R சரியாகத்தான் நடைபெற்றுகொண்டு உள்ளது
நெல் கொள்முதல் குறித்த கேள்விக்கு?
நல்ல விளைச்சல் இருந்தும் மழை காலத்தில் அறுவடை பாதிக்கிறது எனவே மத்திய அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 22 சதவீதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் இது திமுக கோரிக்கை அல்ல விவசாயிகள் கோரிக்கை அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்
மெட்ரோ குறித்த கேள்விக்கு?
மெட்ரோ குறித்து திமுக பாஜக மாறி மாறி பேசி வருகின்றனர். எடப்பாடி நான் ஆட்சிக்கு வந்தால் மெட்ரோ கொண்டு வருவேன் என்கிறார் இது கண்டனத்துக்கு உரியது. இது மக்களின் தேவை.
கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என மாநில அரசு கேட்டால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் இந்த ஆட்சி வந்தால் கொண்டுவருவோம் என்பது காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது போல் உள்ளது
மக்கள் தொகை போக்குவரத்து ஆகியவை குறித்துக் கொண்டு வளர்ந்த நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது எங்கள் கருத்து என்றார்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு?
போதை பொருள் பழக்கம் மூலம் கொலை கொள்ளை அதிகரிப்பதை சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுகவிற்கு தேர்தலில் இது எதிரொலிக்கும்
கூட்டணி குறித்த கேள்விக்கு?
கூட்டணி குறித்து எங்களிடம் பேசிக்கொண்டு உள்ளனர் கூட்டணி அமைந்த பிறகு அதை குறித்து பேசுகிறேன்
விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என அப்பாவு கூறியது குறித்த கேள்விக்கு? அது அவருடைய கருத்து
இதிலிருந்து ஒன்று தெரிகிறது திமுகவிற்கு த.வெ.க என்றால் ஒரு அலர்ஜி என அவர்கள் பேசுவதில் இருந்து தெரிகிறது