சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

0 254
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக திருச்சி மாவட்ட எஸ் பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் பேரில் திருச்சி மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் அய்யம்பாளையம் காவிரி ஆற்றங் கரையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அய்யம்பாளையம் காவிரி ஆற்றங் கரையில் வெள்ளூர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சேகர் ( 57 ) என்பவர் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முசிறி காவல் உதவி ஆய்வாளர் சேகர் சட்டவிரோதமாக மது விற்ற நபர் மீது வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.