திருச்சி தெற்கு மாவட்டத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் எஸ்.ஐ.டி, காட்டூர், கைலாஷ் நகர், முனீஸ்வரன்கோயில், திருவெறும்பூர், வாழவந்தான் கோட்டை, எழில்நகர், குண்டூர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து மோர், தர்பூசணி இளநீர், வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவைகளை வழங்கினார் .
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், மாநில மாவட்ட நிர்வாகி சேகரன், செந்தில், செங்குட்டுவன்,பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்