தொழிலாளர் தினத்தை முன்னிட்டு CPI(ML) கட்சி சார்பாக கட்சி கொடியேற்றபட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிபிஎம் சார்பாக நகர பகுதிகளில் மே 1 தேதி உழைப்பாளர் தினம்
முன்னிட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து
மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு AlCCTU தொழிற்சங்க கொடியை மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் S.இளையராஜா முன்னிலையில் நகர செயலாளர் பி.பாலு ஏற்றிவைத்தார்,
பாரதியார்நகர் பேருந்து நிறுத்தம் முன்பு கட்சியின் கொடியை ஒன்றிய செயலாளர்
M. தங்கராசு ஏற்றி வைத்தார்.
காமராஜர் சிலையில் கட்சியின் கொடியை நகரகுழு உறுப்பினர் K. கோகுல் ஏற்றி வைத்தார்,
27 வது வார்டில் கட்சியின் கொடியை மூத்த தோழர் A. கனகராஜ் ஏற்றி வைத்தார்,
மணப்பாறை பேருந்து நிறுத்தம் முன்பு கட்சியின் கொடியை மாவட்டகுழு உறுப்பினர்
K. மாசிலாமணி ஏற்றி வைத்தார். நொச்சிமேடு பிரிவில் கட்சியின் கொடியை மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் S.இளையராஜா ஏற்றி வைத்தார்.
நிகழ்வில் நகரகுழு உறுப்பினர்கள் J. பாஸ்கர், M.முருகேசன், T. அறிவழகன், மற்றும் ஷாகின்ஷா, சின்னு, ரமேஷ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்,