65 வார்டுகளில் பகுதி சபா கூட்டம் : மேயர் அன்பழகன் பங்கேற்பு

0 119
Stalin trichy visit

திருச்சி, டிச. 10  திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்ட லத்துக்குட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்து , உதவி ஆணையர் சென்னுகிருஷ்ணன் முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார்.

இக்கூட்டத்தில் , சங்கீதபுரம் , பள்ளிவாசல் தெரு, பாத்திமா தெரு, சவேரியார் கோவில் தெரு , தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் . பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார் .
முன்னதாக மேயர் அன்பழகன் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வழங்கும் திட்டம், புதிதாக போடப்பட்டுள்ள சாலைகள் மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய திட்டப் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள்.
மேலும் திருச்சி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
முன்னதாக மனித உரிமைகள் தின உறுதி மொழியை மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் எடுத்துக் கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.