சர்வதேச நன்றிதெரிவித்தல் தினம்; உண்டி கொடுத்தோர்க்கு நன்றி கூறுவோம்

0 370
Stalin trichy visit

ஒரு கைப்பிடி சோறு, நம் வாய்க்கு வர விவசாயிகள் படுகின்ற துன்பத்தை “உழைப்பு” என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு, “சர்வதேச நன்றி தெரிவிக்கும் நாளில் ” நன்றி கூறுவதே சாலப் பொருந்தும் என்பதை உணர்ந்த திருச்சி மாவட்டம் ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள், தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில். விவசாயிகளுக்கு நன்றி கூற புறப்பட்டனர். அவர்கள் விவசாயிகள் பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளுக்கு சிற்றுண்டி வழங்கி மலர்கொத்து கொடுத்து நன்றியினைத் தெரிவித்தனர்.

 

இந்நிகழ்ச்சியின் மூலம் எதிர்காலத்தில் மாணவ சமுதாயம் விவசாயத்தை மதிக்கவும் விவசாயி ளைப் போற்றவும் வழிவகை செய்வதாக தலைமையாசிரியர் கூறினார்.
பள்ளி மாணவர்கள் நேரடியாக விவசாய நிலத்திற்கு வந்து உலக நன்றி தெரிவிக்கும் நாளில் தங்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சியை கண்டு நெகிழ்ந்து போன விவசாய பெருமக்கள் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.