கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி மாதம் சென்னையில் பேரணி நடத்த முடிவு

0 579
Stalin trichy visit

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சாமிபிள்ளை தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் விக்டர் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் இக்பால் பாஷா வரவேற்று பேசினார். மழை வெள்ளத்தின்போது சிறப்பாக செயல்படும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். ஓட்டுநர்களை அரசு முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும்.

ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் சென்னையில் மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும். படித்த இளைஞர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.