மணப்பாறையில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு : நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

0 19
Stalin trichy visit

திருச்சி, அக்.20  திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை தலையிட்டு உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. பழுதடைந்த சாலைகளில் வெட்மிக்ஸ் மெக்கடம் (WMM – Wet Mix Macadam) முறையில் ஜல்லி, மணல் கலவை கொண்டு நிரப்பி சாலைகள் சமன் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டன.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் மழைக்காலத்தை முன்னிட்டு சாலைகளை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.