அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

0 263
Stalin trichy visit

திருச்சி, ஆக. 9  மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதியில் 70 ஆயிரம் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வழங்கி துவக்கி வைத்தார்.

மண்ணச்சநல்லூர், சமயபுரம் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக திருச்சி புறநகர வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள் மண்ணச்சநல்லூர் சேர்ந்த 10 பகுதி செயலாளர்களிடம் சுமார் 70 ஆயிரம் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டிபி பூனாட்சி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார்,ஆதாளி, முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆம்பூர் ஜெயராமன். அனைவரையும் வரவேற்று பேசினார்கள். அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ஜி.ரமேஷ், மாணவரணி மாவட்ட தலைவர் இனம் கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும்மான எம்.ஆர்.வி.பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப மண்டல துணை செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர சமயபுரம் செல்வி வெங்கடேசன், டி கே கார்த்தி,சமயபுரம் தினேஷ். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் எதுமலை விமலா, மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், தெற்கு மாவட்ட புறநகர் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கதிரவன், செயலாளர் மகளிர் அணி மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சண்முக குரூப்ஸ் வடிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.