தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைப்பு

0 237
Stalin trichy visit

திருச்சி, ஆக. 9  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் மற்றும் மகிழம்பாடி ஊராட்சிகளுக்கு இடையே உள்ள உப்பாறு குறுக்கே இருந்த பழமையான தரைப்பாலம் சேதம் அடைந்ததால் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

இதனால் அப்பகுதி மக்கள் உப்பாறை கடந்து செல்ல புதிய தற்காலிக தரைப்பாலம் அமைத்தனர் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கன மழையினால் தற்காலிக தரைப்பாலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதனை புதன்கிழமை சரிசெய்தனர்.

இந்த சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் சரவணகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.