சூரியூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டரங்கம் : துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

0 146
Stalin trichy visit

திருச்சி, ஜன.17  திருச்சி அருகே ரூபாய் 3கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு சிறு விளையாட்டரங்கம் – தமிழக துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் ரூபாய் 3கோடி மதிப்பீட்டில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருச்சி சூரியூரில் தமிழக வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான ஸ்டேடியம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார்.

இப்பணிகள் முடிக்கப்பட்டு நாளை திருச்சியின் முதல் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று கட்டி முடிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சிறு விளையாட்டரங்கத்தை
தமிழக துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். புதிய அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கேலரியில் மொத்தம் 810 பேர் அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம். கேலரியின் ஒருபுறம் பொதுமக்களும், மறுபுறம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் அமர்வதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டில் காளைகளை ஒழுங்கான முறையில் அவிழ்த்து விடுவதற்காக ‘வாடிவாசல்’ , மேலும் ஒரு அலுவலகக் கட்டிடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்

திருச்சியில் பெருமை வாய்ந்த இடமாக சூரியூரில் திராவிட மாடல அரசின் சார்பில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை உங்களுடன் கொண்டாட இங்கு வந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்துள்ளோம். திருச்சிக்கு மலைக்கோட்டையும், காவேரி ஆறும் அடையாளங்களாக இருப்பது போல் சூரியூர் ஜல்லிக்கட்டும் அடையாளம் முதலமைச்சர் மினி ஸ்டேடியங்களிலேயே இந்த சூரியூரில் திறக்கப்பட்டுள்ள மினி ஸ்டேடியம் தான் அழகாகவும் தமிழர்கழின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக உள்ளது

திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு வளர்ச்சிகளை தமிழ்நாடு கண்டு வருகிறது. சூரியூரும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.

மதுரை அலங்காநல்லூருக்கு அடுத்தப்படியாக ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் சூரியூரில் தான் கட்டப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசளித்த காளைக்கு சூரியூர் என பெயர் வைக்கிறேன் என்றார்.

விழாவில் அமைச்சர்கள் கோவி.செழியன், கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே என் சேகரன் அன்பில் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.