அய்யனார் ஆலடி நீலமேக கருப்பண்ணசாமி வகையறா கோயிலில் கிடாவெட்டி நள்ளிரவு பூஜை

0 147
Stalin trichy visit

திருச்சி, ஜன.17  அருள்மிகு அய்யனார் ஆலடி நீலமேக கருப்பண்ணசாமி வகையறா கோயிலில் 13 வகையான பூஜை மற்றும் கிடாவெட்டி நள்ளிரவு பூஜை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அப்பாத்துரை கிராமத்திலுள்ள அருள்மிகு அய்யனார் ஆலடி நீலமேக கருப்பண்ணசாமி வகையறா திருக்கோவிலில்  தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 வகையான பூஜைகள் மற்றும் கிடாவெட்டி நள்ளிரவு பூஜை நடைப்பெற்றது. மேற்படி விழாவில் முக்கிய பிரமுகர்கள் குடிப்பாட்டுக்காரர்கள் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் இறை அன்பர்கள் கலந்துகொண்டு அருள்மிகு அய்யனார் ஆலடி நீலமேக கருப்பண்ணசாமி திருவருளை பெற்று சென்றார்கள் மேற்படி விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும்  திருக்கோவில் நிர்வாக அறங்காவலர்களால் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது

Leave A Reply

Your email address will not be published.