பருவமழையால் நிரம்பி வழியும் ஜம்பேரி ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி
திருச்சி, அக். 24 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வைரி செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜம்பேரி ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பெருமளவில் நீர் வந்து சேர்ந்ததால், ஜம்பேரி தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த ஏரியின் சிறப்பம்சம் என்னவென்றால் — திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் முதலாவதாக நிரம்பிய ஏரி என்பதுதான்.
துறையூர் தாலுகாவில் மிகப் பெரிய ஏரியாக கருதப்படும் இந்த ஏரி, சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பறந்து அமைந்துள்ள ஏரியானது நிரம்பி வெங்கடாசலபுரம் ஏரி,மாரடிஏரி, ஆளதுடையான் பட்டி ஏரி, சிறு நாவலூர் ஏரி . போன்ற பகுதியில் உள்ள ஏரிகள் பயன் பெறுகிறது.
ஜம்பேரி ஏரியில் சேமிக்கப்பட்ட நீரால் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரி நிரம்பிய செய்தி பரவியதும், சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து, ஏரிக்கரையில் மலர் தூவி, தீபம் காட்டி, தூபம் ஏற்றி ஏரியின் நீரை வரவேற்று தங்கள் நன்றியும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தினர்.