குழுமணி பகுதியில் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதற்கு மக்கள் சக்தி இயக்கம் கண்டனம்

0 159
Stalin trichy visit

திருச்சி, ஜன.22  திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட குழுமணி சாலை, சந்தோஷ் எஸ்டேட் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு மக்கள் சக்தி இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. .

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட குழுமணி சாலை, சந்தோஷ் எஸ்டேட் பகுதியில்  சாலை ஓரமாக நடப்பட்ட 7மரங்கள் வளர்ந்து 10 அடி உயரம் வரை – செழித்திருந்தன. பறவைகள் கூடு கட்டி, இயற்கை சூழலை வளப்படுத்திய இந்த மரங்கள், அந்தபகுதியில் வெப்பத்தை குறைத்து, காற்றின் தரத்தை மேம்படும் அளவிற்கு வளர்ந்து இருந்தது. மின்வாரியமாக இருந்தாலும் அனுமதி வாங்கி பெற வெட்ட வேண்டும். மரங்களை அனுமதி இன்றி வெட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால் வெட்டியது மின்வாரியம் மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றால் மின்கம்பிகள் மீது கிளைகள் படர்ந்திருந்தாலும் மரம் முழுவதுமாக வெட்டாமல் கிளை மட்டும் வெட்ட அதுவும் முன் மாநகராட்சி அல்லது மாவட்டம் அல்லது வனத்துறை நிர்வாகியிடம் அனுமதி பெற்ற பிறகு மரக்கிளைகளை வெட்டவேண்டும், அவசரத்தை காரணம் காட்டி முழு மரம் வெட்ட முடியாது.

எனவே இந்த 5 மரங்களை அதுவும் பறவைகள் கூடுகாட்டிய மரம் என தெரிந்து வெட்டியது கண்டனத்திற்குரியது. இந்த மரம் வெட்டியவர்கள் மீது சட்டப்படி ஒரு மரத்துக்கு 10 மரம் நட்டு வளர்க்க வேண்டும், மேலும் வரி வசூல் செய்ய வேண்டும். “இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தம் இல்லை, அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது” என உணர வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.