துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு : மர்மநபர் கைவரிசை

0 343
Stalin trichy visit

துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு : மர்மநபர் கைவரிசை திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகரில் பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டில் 10 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் திருட்டு.

திருச்சி மாவட்டம் துறையூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜு (வயது 50) அப்பகுதியில் உள்ள சர்பத் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் சம்பவம் நடந்த நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றவர் மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது வீட்டை திறந்த போது உள்பக்கமாக வீடு தாப்பாள் போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினரை அழைத்து பார்த்த பொழுது பின்பக்கமாக ஓடு பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறை வந்தவுடன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த பொழுது ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள் 1.30 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் வரதராஜு அளித்த புகாரின் பேரில் துறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பணம் மற்றும் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.