பணி பாதுகாப்பு சட்டம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

0 258
Stalin trichy visit

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர்
ம.சேவியர் பால்ராஜ்
தலைமையில்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு
வே.சிவகுமார்
கலியபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்றும் தீர்மானங்களை விளக்கியும்
மாவட்ட செயலாளரும், மாநில பொருளாளருமானநீலகண்டன் பேசினார்..

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

👉ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது…

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பணி மாறுதல் என்ற போர்வையில் பந்தாடுவதை நிறுத்தி முறையாக வருகிற மே மாதம் உபரியாக உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கலந்தாய்வு நடத்தி அவர்களது பணியை உறுதி செய்ய வேண்டுமாய் செயற்குழு பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது…

வருகின்ற ஏப்ரல் 15 ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை முடித்து மாவட்ட அமைப்பில் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

வட்டார கிளை தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஏற்ப்பளிக்கப்பட்டது…

வட்டார தணிக்கை செய்வதை மாவட்ட தலைவர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் தலைமையில் மேற்கொள்வது என ஏகமனதாக திருமண நிறைவுற்றப்பட்டது..

இக்கூட்டத்திற்கு  பொதுச் செயலாளர் வி எஸ் முத்துராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்கள் சார்பான கோரிக்கையில் சம்பந்தமாகவும், ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசி பேசினார்..

இக்கூட்டத்தில் வட்டாரச் செயலாளர்கள்
அமல் சேசுராஜ்,
சுரேஷ் ராஜ்,
தேவகி,
மணி பாரதி,
மாவட்ட துணை செயலாளர்,
பெர்ஜித் ராஜன்,
ஐசக் டேவிட்,
அருள் குமார்,
மாநில பொதுக்குழு உறுப்பினர்
செந்தில்குமார்,
மாவட்ட பொது குழு உறுப்பினர்கள்
ஹக்கீம் அலி,
பவுல்ராஜ்,
சரவணன்,
ரோம்,
வில்லியம் கில்சன்,
பழனியாண்டி,
கார்த்திகேயன், மலர்விழி
சகாயராஜ்,   இளங்கோ
உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்…

நிறைவாக மாநில பொதுக்குழு உறுப்பினர்
சரவணன் நன்றி உரையாற்றினார்..

Leave A Reply

Your email address will not be published.