ரூ.73.97 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 272
Stalin trichy visit

திருச்சி, அக். 2  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த கூடப்பள்ளி மற்றும் 97 ஊரக குடியிருப்புகளுக்காக ரூ. 73.97 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 24.63 கோடி மதிப்பீட்டில் 1680 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் கிராமத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) சார்பில் ரூ. 73.97 கோடி மதிப்பீட்டில் மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஒன்றியங்களைச் சார்ந்த கூடப்பள்ளி மற்றும் 97 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டத்தினை தொடங்கி வைத்தும், ரூபாய் 34.50 இலட்சம் மதிப்பீட்டில் சனமங்கலம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தனிநபர் இல்ல வீட்டு குடிநீர் இணைப்பு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், ரூ. 24.63 கோடி மதிப்பீட்டில் 1680 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஒன்றிங்களைச் சார்ந்த கூடப்பள்ளி மற்றும் 97 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.73.97 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு தற்பொழுது அனைத்து பணிகளும் முடிவுற்று திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

இந்த திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளைச் சார்ந்த 87 குடியிருப்புகள் மற்றும் முசிறி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளைச் சார்ந்த 11 குடியிருப்புகளில் உள்ள 1,14,500 மக்கள் பயன்பெறும் வகையில் முடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோவில் ஊராட்சி, கூடப்பள்ளி அருகில் கொள்ளிடம் ஆற்றில் புதிய மூன்று நீர் உறுஞ்சு கிணறு, நீர் சேகரிப்பு கிணறு மற்றும் தற்போதுள்ள மூன்று நீர் உறுஞ்சு கிணறு, நீர்சேகரிப்பு கிணறு, இந்த இரண்டு கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் 6.80 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு அய்யம்பாளையம் கிராமத்தில் கட்டப்படவுள்ள 1.60 இலட்சம் கொள்ளளவு கொண்ட நீர் உந்து நிலையம் மற்றும் பூனாம்பாளையம் கிராமத்தில் பயன்பாட்டிலுள்ள 0.90 இலட்சம் கொள்ளளவு நீர்உந்து நிலையம் மூலம் 134.51 கி.மீ நீளத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 46 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது. தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து 151.36 கி.மீ நீளம் குழாய்கள் பதித்து அங்கிருந்து ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 197 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள

ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மேலும், சணமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ. 37.54 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் 530 பயனாளிகளுக்கு ரூ. 18.55 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 183 பயனாளிகளுக்கு ரூபாய் 1.13 கோடி மதிப்பீட்டில் ஊரசு வீடு பழுது நீக்கத்திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 252 பயனாளிகளுக்கு ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் 8 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், சமூதாய முதலீட்டு நிதிகளும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நுண் நிறுவன கடன் நிதி 10 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும், தாவ்பில் 14 பயனாளிகளுக்கு ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தூய்மை விடு வழங்குவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் மானியம் 2 நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவியும். 18 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 100 மகளிர் சுமடீ தவிக்குழுக்களுக்கு ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதூகாப்பு திட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 15 நபர்களுக்கு ரூபாய் 18 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 1.79 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட
பயனாளிகளுக்கு ரூபாய் 18.55 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 183 பயனாளிகளுக்கு ரூபாய் 1.13 கோடி மதிப்பீட்டில் ஊரக வீடு பழுது நீக்கத்திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 252 பயனாளிகளுக்கு ரூபாய் 1.73 கோடி மதிப்பீட்டில் 8 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், சமூதாய முதலீட்டு நிதிகளும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நுண் நிறுவன கடன் நிதி 10 நபர்களுக்கு ரூபாய் 6 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும், தாட்கோ சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கான வீடு வழங்குவதற்கான ஆணைகளையும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலை வாய்ப்பு வங்கி கடன் மானியம் 2 நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவியும், 18 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 100 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதூகாப்பு திட்டத்தின் உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 15 நபர்களுக்கு ரூபாய் 18 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 1.79 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புதிட்டத்தின் கீழ் வைப்பீட்டு தொகை பத்திரம் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 293 பயனாளிகளுக்கு ரூபாய் 16.29 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபாய் 34 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட

உதவிகளும் என மொத்தம் ரூபாய் 24.63 கோடி மதிப்பீட்டில் 1680 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பேரூராட்சிகள் துறை)யின் சார்பில் ரூபாய் 170 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை திறந்து வைத்தும், ரூபாய் 146.50 இலட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தும், ரூபாய் 44.46 இலட்சம் மதிப்பீட்டில் செம்மைப்படுத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா சமுதாய கூடத்தை திறந்து வைத்தும், 12 பேரூராட்சிகளுக்கு பொது சுகாதார பயன்பாட்டிற்காக ரூபாய் 85.84 இலட்சம் மதிப்பீட்டில் 34 இலகுரக வாகனம், டிராக்டர் வாகனம் மற்றும் மின்கல வாகனங்களை பயன்பாட்டிற்காக மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர்கள்.தியாகராஜன், ஸ்டாலின்குமார், கதிரவன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் எஸ்.எழிலரசன், நிர்வாகப் பொறியாளர்கள்தங்கராஜ், நாகஆனந்த், பன்னீர்செல்வம், உதவி நிர்வாகப்பொறியாளர் கார்த்திக்கேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, ஒன்றிய பெருந்தலைவர்கள் மாலாராமச்சந்திரன், சனமங்கலம் ஊராட்சித் தலைவர் ஹேமலதா ஸ்ரீனிவாசபெருமாள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.