விவசாயிகளுக்கு நெல்சாகுபடி குறித்து பண்ணை பள்ளி
திருச்சி, அக். 2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வளவனூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மிகச்சன்ன ரகம் நெல் சாகுபடி பற்றிய பண்ணை பள்ளி துவங்கியது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் இரா.சுகுமார் பேசுகையில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் தக்கை பூண்டு விதைத்து மண்வளம் மேம்படுத்தல் , மண்ணாய்வு அவசியம், மண் வள அட்டை திட்டம் , உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி செய்தல்,நெல் சாகுபடியில் மிகச் சன்ன ரகம் விதை தேர்வு நாற்றங்கால் பராமரிப்பு பற்றி விரிவாக விளக்கி கூறினார் .மேலும் இப்பண்ணைப் பள்ளியில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை சாகுபடி குறித்த கையேடு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் அய்யாசாமி பேசுகையில். வேளாண்மை துறை செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பற்றி விவசாயிக்கு விரிவாக விளக்கி கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் அட்மா திட்ட செயல்பாடுகள் , விவசாயிகள் பயிற்சி கண்டுணர்வு சுற்றுலா செயல் விளக்கம் திடல் அமைத்தல் பற்றி விரிவாக விளக்கி கூறினார் உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் உழவன் செயலி மற்றும் பாரதப் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தில் உள்ள பயனாளிகள் அனைவரும் தங்களது சுய விபரத்தினை பதிவு செய்து தொடர்ந்து தவணைத் தொகை பெற கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலர் ராஜசேகரன் மற்றும் முன்னோடி விவசாயி ராஜாராம் ஆகியோர் செய்திருந்தனர்.