கார் கவிழ்ந்த விபத்தில் செய்தியாளர் உயிரிழப்பு

0 334
Stalin trichy visit

திருச்சி, பிப்.4  மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு
மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் தவசி மணி (44). தனியார் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த பிரவின் (26) என்பவரும் காரில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்து தடுப்பு கட்டையை மோதிக் கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் செய்தியாளர்  தவசிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரவின் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.