ஜூன் 5 மிஷன் இயற்கை சுற்றுச்சூழல் தினம் 

0 209
Stalin trichy visit

 

திருச்சி, ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் திமான ஜூன் 5 ம் நாள் அனைத்துப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாட பள்ளிக் கல்வித் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அது சமயம் மிஷன் இயற்கை என்ற கருப்பொருளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள்,மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் என அனைத்து தரப்பினரையும் இணைத்து, கீழ்வரும் சுற்றுச்சூழல் தினம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

6. 6. 2004 முதல் 14. 6. 2004 வரை உள்ள ஏழு நாட்களுக்கும் பள்ளியில் உள்ள சுற்றுச்சூழல் மன்றங்கள் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், நிலையான உணவு முறையை ஏற்றுக்கொள்ளுதல் , மின் கழிவுகளைக் குறைத்தல், கழிவுகளைக் குறைத்தல், ஆற்றலைச் சேமித்தல், தண்ணீரைச் சேமித்தல் , ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலுமாக வேண்டாம் என மறுத்தல் முதலிய செயல்பாடுகளைச் செய்யுமாறும் இது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறும் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை ஒட்டி சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 ஆம் தேதி வடக்கு சேர் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் மதிப்பிற்குரிய தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள் வருகை புரிந்த காலத்தில் நடப்பட்டதும் 60 ஆண்டுகளாக நிழல் தந்து கொண்டிருக்க கூடியதும் ஆன இரண்டு பெரிய நெட்டிலிங்க மரத்தை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்ததோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மேலும் பல்லை வளாகத்தில் புதிதாக ஆறாம் வகுப்பு சேர்கின்ற மாணவ மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த ஏழு நாட்களில் நடைபெறுகின்ற சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் GPRS கேமரா மூலம் படம் எடுத்து அதனை ஆவணப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை உதவி தலைமை ஆசிரியர் மணிமொழி  ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.