திருச்சியில் பிப்.7 -இல் ஜோதிர்லிங்க மகா ருத்ர பூஜை

0 104
Stalin trichy visit

திருச்சி, பிப்.5 சோமநாத் ஜோதிர் லிங்கம் மகா ருத்ர பூஜை திருச்சியில் நடைபெற உள்ளது.

சோமநாத் ஜோதிர் லிங்கம் மகா ருத்ர பூஜை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் அரங்கில் நடைபெற்றது இதில் சிவயோகி அனுகுல நாத ராஜசேகர் அடிகளார்,வாழும் கலை அமைப்பு.பெரிய தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழும் கலை அமைப்பு மூத்த ஆசிரியர் சந்திரசேகர் கூறுகையில் .

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்நிய படையெடுப்பின் போது தகர்க்கப்பட்ட காலத்தாலும் கலங்காத சிவபெருமானின் அருள் வடிவான சோம்நாத் ஜோதிர் லிங்கத்தின் ருத்ர பூஜை ஜனவரி 30 ஆம் தேதி குரு தேவர் ஸ்ரீ ரவிசங்கரால் சோம் நாத் ஜோதிர்லிங்கத்திற்கு மகர ருத்ர பூஜை ராமேஸ்வரத்தில் நடைபெற்றது

தற்போது திருச்சி மலைக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டு ருத்ர பூஜையுடன் வழிபாடு பிப்ரவரி 7ஆம் தேதி செய்யப்பட உள்ளது.மாலை 5:30 மணியில் இருந்து பூஜைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

இதில் ஆன்மீகவாதிகள் கலந்து கொள்ள உள்ளனர் இந்த பூஜை வெகு சிறப்பாக நடைபெறும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும் என தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.