கலைஞர் பிறந்தநாள் : மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூன் 3 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு ,கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய , மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்