அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட நூல்கள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

0 361
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025- 26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, வழங்கி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், மரக்கடை பகுதியிலுள்ள சையது முர்துசா அரசு மேல்நிப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா, பள்ளித் தலைமையாசிரியர் மெர்சி கிரைசி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.