முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 171
Stalin trichy visit

திருச்சி, ஆக.7 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர்  7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி.வி.எஸ். டோல்கேட் வரை அமைதி பேரணியாக சென்று முத்தமிழறிஞர் கலைஞர்  திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் .

இந்த நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், சபியுல்லா, மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், லீலாவேலு, பகுதி செயலாளர் மணிவேல், மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை, கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.