கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 128
Stalin trichy visit

திருச்சி, ஆக.6 திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை (ஆக.7) காலை 10.30 மணிக்கு அண்ணா விளையாட்டரங்கம் ரவுண்டானா முதல் டி.வி.எஸ். டோல்கேட் வரை அமைதி பேரணியாக சென்று முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்த உள்ளோம்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை, கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.