கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி

0 328
Stalin trichy visit

திருச்சி, டிச.30  திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு சாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாட்டுதல் மற்றும் 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரி மாலை சாற்றுதல் வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்காக இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு ஏழு மணி அளவில் வடமாலை மற்றும் ஜாங்கிரி சாற்றும் வைபவம் நடைபெற்றது.

நிகழ்வில்  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு கோவிலில் வழங்கப்பட்ட பிரசாத பைகளை வாங்கிச் சென்றனர். இவ்விழாவிற்காக கோவில் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.