சிறுவன் தவறவிட்ட தங்கச்சங்கிலியை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு

0 404
Stalin trichy visit

திருச்சி, ஜன.21  காட்டுப்புத்தூரில் தெருவில் சிறுவன் தவறவிட்ட தங்க சங்கிலியை மூன்று நாள் கழித்து கண்டுபிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சிறுவனின் கழுத்தில் இருந்து மாயமான தங்க செயினை போலீசார் தேடி கண்டுபிடித்து கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொட்டியம் அருகே உள்ள சின்ன பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் டிரைவர் சந்திரதுரை. இவரது மகன் தீபக் (13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சந்திரதுரை தனது மகன் தீபக்கை முடி வெட்டுவதற்காக காட்டுப்புத்தூர் அழைத்து வந்துள்ளார். மகனுக்கு முடி வெட்டிய பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தீபக் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. இதையடுத்து சந்திரதுரை மீண்டும் காட்டுப்புத்தூர் வந்து சலூன் கடை உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் தங்கச் சங்கிலி கிடைக்கவில்லை. பின்னர் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் சந்திரதுரை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்புத்தூர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த வழியாக வந்த இரண்டு சிறுமிகள் கீழே கிடந்த தங்க சங்கிலியை கையில் எடுத்து பார்த்துவிட்டு அப்பகுதியில் தூக்கி எறிந்து விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் சிறுமிகள் வீசிச் சென்ற இடத்திற்கு சென்று பார்த்தபோது தங்க சங்கிலி அங்கேயே கிடந்துள்ளது. பலர் அந்த வழியே நடந்து செல்லும் நிலையில் தங்க சங்கிலி யார் கண்ணிலும் படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் மாயமான தங்க சங்கிலியை மீட்ட போலீசார் சந்திரதுரையை காவல் நிலையம் அழைத்து தங்க சங்கிலியை ஒப்படைத்தனர். சிறுவன் கழுத்திலிருந்து தவறுதலாக காணாமல் போன தங்க சங்கிலியை போலீசார் சமயோகிதமாக யோசித்து கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.