அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : லால்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்
திருச்சி, நவ.22 திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் மா. சரவணவேல் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் +1 பயிலும் 185 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கி தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நலத்திட்டங்களான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், கல்லூரிக் கனவு, காலை உணவு திட்டம் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் போராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர் திருமதி ஜோ.ஆலிஸ் செல்வராணி, ஜோசப்செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் ப.ஜீவானந்தம் ம.ரம்யா மனோகரன், மா. ஆரோக்கியமேரி, பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற பொருளாளர் ஆ. தெய்வசிகாமணி PTA தலைவர் பாஸ்கர் (எ) சந்திரசேகர், SMC தலைவர் நித்யா உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரி, வெண்ணிலா, சத்திய பிரியா, புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக உதவித் தலைமையாசிரியர் த . அனுராதா நன்றியுரை வழங்கினார்.