மணப்பாறை அருகே சாலை விபத்து : போலீசார் விசாரணை

0 268
Stalin trichy visit

திருச்சி, நவ.22  மணப்பாறை அருகே சாலை விபத்து போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் கீழ சிந்தாமணியைச் சேர்ந்தவர் சக்திவேல் (58). இவர் மதுரைக்கு சொந்த வேலையாக அவரது காரில் சக்திவேலின் மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த முத்துப்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனை தாண்டி அடுத்த பகுதியில் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த மூவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .மேலும் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு துவரங்குறிச்சி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர் .மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.