கலைஞர் நூலகம் அமையவுள்ள இடம் : அமைச்சர் உதயநிதி ஆய்வு
திருச்சி, ஜூலை 31 கலைஞர் பெயரால் திருச்சியில் அமையவிருக்கும் புதிய நூலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் கே என் நேரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.06.2024 நாளன்று முதலமைச்சர் அவர்களால் விதி எண்.110ன்கீழ் காவேரிக்கரையில் அமைந்த மாநகரமான திருச்சிமாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி – மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமையவுள்ளது.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் , மு அன்பழகன் மற்றும் மண்டலம் மூன்றின் தலைவர்
மு மதிவாணன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் , பொது நூலக இயக்குநர் இளம்பகவத் . பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.