லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
திருச்சி, ஜூன் 2 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை நேற்று போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டேம் 4 ரோடு பகுதியில், மணப்பாறை ஆண்டவர் கோயில் பகுதியை சேர்ந்த கம்மா நாயக்கர் மகன் பெருமாள்(59) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நல்ல நேரம், குயில், விஷ்ணு, குமரன் ஆகிய அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில், கையும் களவுமாக பிடிபட்டார். லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த வையம்பட்டி போலீஸார், பெருமாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.