கலைஞர் பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 375
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 2  திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர்  102வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 102வது பிறந்த நாளை முன்னிட்டு கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி, நாளை (ஜூன் 3)  மதியம் 2 மணிக்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர்  திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் சென்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

மேலும் நாளை (ஜூன் 3) காலையி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகங்களில் கழக இருவண்ண கொடியேற்றி முத்தமிழறிஞர் கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.