திருச்சி விமான நிலையத்தில் மலேசிய சுற்றுலா பயணி மூச்சு திணறி சாவு

0 143
Stalin trichy visit

திருச்சி ஜுலை 24  திருச்சி விமான நிலையத்தில் மலேசிய சுற்றுலா பயணி மூச்சு திணறி சாவு. மலேசியா நாடு செலங்கூர் செடலின், கலன் ஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் முருகையா (வயது 54). மலேசிய நாட்டு பிரஜை .இவர் சுற்றுலாவுக்காக திருச்சி வந்தார். திருச்சியை சுற்றிப் பார்த்த பின்னர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். விமானம் ஏறுவதற்காக சென்றபோது அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மலேசியாவை சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி, போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.