தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 319
Stalin trichy visit

திருச்சி அக் 11 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இன்றும், நாளையும் 2 நாட்கள் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மத்திய மண்டல தீயணைப்பு நிலைய இயக்குனர் அலுவலகத்தில் வாங்க கற்றுக் கொள்வோம். தீ பாதுகாப்பு அறிவோம்.. உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத் மற்றும் உதவி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் லியோ ஜோசப், கருணாகரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு தீ தடுப்பு குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் விரிவாக எடுத்து உரைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தீபாவளி நேரத்தில் பலகாரம் செய்யும் பொழுது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது எப்படி என்பது குறித்தும்,பொது இடத்தில் தீ பிடித்தால்அதனை அனைப்பது எப்படி என்பது குறித்தும் தீயணைப்பு துறை ஊழியர்கள் அலுவலர்கள் விரிவாக செய்முறை செய்து விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளையும் நடைபெறுகிறது.

விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது எப்படி என்பது குறித்தும் குறிப்பாக தீ விபத்து ஏற்பட்டால் தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.