மனிதனை மனிதன் தூக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் -மக்கள் அதிகாரம்
மனிதனை மனிதன் தூக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் – பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜூ திருச்சி பேட்டி.
மக்கள் அதிகாரத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சி பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்
தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் ஆளுநர் ஆர்.ன். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மே 17 தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டமும், தருமபுர ஆதின விவகாரம் தொடர்பாக மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல் மதவிவகாரம் அல்ல எனவே பல்லாக்கு நிகழ்வை உடனே தடை செய்ய வேண்டும் என மே 22 தேதி மயிலாடுதுறையில் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.
பட்டின பிரவேச நிகழ்ச்சியை பொருத்தவரை மனிதனை மனிதன் தூக்குவது எந்த அளவிற்கு அறிவுடைமை நிறைந்த செயல் என்று கேள்வி எழுப்பினார்.