தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் மாநகர காவல் ஆணையர் கலந்தாய்வு
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
திருச்சி மாநகர் பகுதிகளில் பேருந்துகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குடிபோதையில் பேருந்துகளில் ஏறி நடத்துனர்,ஓட்டுனர் மற்றும் பொதுமக்களின் தாக்குதல் போன்ற சம்பவத்தில் எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள சிசிடிவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் – எனவே மேற்படி சம்பவங்கள் நடக்காமல் இருக்க பேருந்துகளில் சிசிடிவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.
மேலும் மிக முக்கியமாக தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை அபாயகரமாக ஓட்டுவதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டது – பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதில் காவல்துறையும் பேருந்து உரிமையாளரும் கூட்டுப்பொறுப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டிப்பாக தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வதாக உறுதி கூறினர்.